Latestஉலகம்

நிலவின் மறுபக்கத்தில் தரையிறங்கியது சீன விண்கலம்

பெய்ஜிங், ஜன. 5- நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சீன விண்கலம், வெற்றிகரமாக தரையிறங்கியது. சாங்யி- 4  என்ற அந்த விண்கலத் திட்டத்தின் கீழ் நிலவுக்கு ரோபோவுடன் கூடிய விண்கலத்தை சீனா அனுப்பியது. வெற்றிகரமாக அது நிலவில் தரையிறங்கியது.

இந்த விண்கலம் மூலம், அங்குள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

பொதுவாக, நிலவின் இருண்ட பக்கம் என்றழைக்கப்படும் இந்த இடத்திலும் சூரிய வெளிச்சம் காணப்பட்டாலும் பூமியிலிருந்து இந்த இடத்தை பார்க்க முடியாது என்பதால் தான் இதை அவ்வாறு அழைக்கின்றனர்.

பூமியின் தொலை தூரத்தில் ரேடியோ அலைகளை அடிப்படையாக கொண்ட தொலைநோக்கிகளை நிலவின் தென் துருவத்தில் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும் இந்த விண்கலம் மேற்கொள்ளும்.

அதுமட்டுமின்றி, நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, அராபிடாப்சிஸ் தாவரத்தின் விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள் ஆகியவை மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker