Latestமலேசியா

கேமரன் மலைத் தேர்தலில் களமிறங்குகிறார் கேவியஸ்!

கோலாலம்பூர்,ஜன.6- கேமரன் மலை இடைத்தேர்தலில் களமிறங்கவிருப்பதாக மைபிபிபியின் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் இறுதியாக உறுதிப்படுத்தி விட்டார்.

“இப்படியொரு சூழல் ஏற்படும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். மொத்தம் உள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளில் கேமரன் மலையும் அடங்கும். இந்தத் தொகுதியில் போட்டியிடத்தான் பொதுத்தேர்தலின்போது கேட்டிருந்தேன். அங்கு எனது உழைப்பையும் போட்டேன்.

“அதனால், இந்த வாய்ப்பை நான் விடுவதாக இல்லை. கேமரன் மலையில் நான் போட்டியிடுவது உறுதி” என்று கேவியஸ் மைபிபிபி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மதியம் மைபிபியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு பிறகு தனக்கு கிடைத்த ஆதரவை அடுத்து அவர் இந்த அறிவிப்பைச் செய்தார்.

14-ஆவது பொதுத் தேர்தலின்போது தேசிய முன்னணி தன்னைதான் கேமரன் மலையில் வேட்பாளராக நிறுத்தப் போகிறது என்ற நம்பிக்கையில் கேவியஸ் அத்தொகுதியில் பணிகளை மும்முரமாகச் செய்து வந்தார்.

கடைசியில், தேசிய முன்னணி மஇகாவின் டத்தோ சிவராஜ்ஜை அத்தொகுதியில் களமிறக்கியது. சிவராஜ்ஜும் அத்தொகுதியை வெற்றிக் கொண்டார்.

எனினும், லஞ்சம் கொடுத்து வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக சிவரஜ்ஜின் மீது குற்றம் சாட்டப்பட்டதால், அவரது வெற்றி செல்லாதென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தான் தேர்ந்த்டுக்கப்பட்ட வேட்பாளர் இல்லை என்றாலும், இந்த இடைத்தேர்தலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக கேவியஸ் நம்பிக்கையோடு கூறினார்.

தொழிலாளர்கள் பிரச்சனை, இயற்கை சுற்றுச் சூழல், வீடமைப்பு, பூர்வக்குடி மக்கள், நிலம் ஆகிய பிரச்சனைகள் குறித்து தனது தேர்தல் பரப்புரைகள் இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker