Latestமலேசியா

கேமரன் மலை: நான் போட்டியிட்டால் மஇகா ஒதுங்கிவிடும்! – கேவியஸ் நம்பிக்கை

கோலாலம்பூர், ஜன. 6- கேமரன் மலை இடைத் தேர்தலில் தாம் போட்டியிட்டால் ம இகா போட்டியில் இருந்து ஒதுங்கிவிடக் கூடும் என்று சர்ச்சைக்குரிய மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ எம். கேவியஸ் கூறினார்.

ஜனவரி 26ஆம் தேதி நடக்கும் கேமரன் மலை இடைத்தேர்தலில் தாம் போட்டியிடும் பட்சத்தில் தேசிய முன்னணி அங்கு மஇகாவைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் சாத்தியம் இல்லை என்று தாம் நம்புவதாக கேவியஸ் குறிப்பிட்டுள்ளார்.

“நான் எனது வேட்பு மனுவை அறிவித்தால், மஇகாவுக்கு தேசிய முன்னணி அங்கு ‘சீட்’ தராது. இது என்னுடைய கருத்து. ஒருவேளை இது தவறாகவும் இருக்கலாம் என்றார் அவர்.

அந்தத் தொகுதியில் நாம் கடந்த நான்கு ஆண்டுகளாக சேவை செய்து வருகிறேன். அங்குள்ள மக்களுக்கு நான் மிகவும் அறிமுகமானவன்” என்று கேவியஸ் சொன்னார்.

அவர்கள் ஒரு வேட்பாளரை அங்கு நிறுத்துவது என்பது கூட்டிக் கழித்துப் பார்த்தால் தவறாகத்தான் இருக்கும். ஏனெனில், இந்தியர்கள் மத்தியில் மஇகாவை விட நான் தான் அதிகப் பிரபலமாக இருக்கிறேன் என்று மலேசிய கினியிடம் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக தாம் அங்கு சேவையாற்றி வருவதற்கும் வாக்காளர்களிடையே பிரபலமாக தாம் விளங்குவதற்கும் அப்பால் அத்தொகுதி மஇகாவில் நிலவும் கோஷ்டிப் பூசல், கட்சிக்கு எதிராக திரும்பி விடும் என்றார் அவர்.

எந்தவொரு கூட்டணியிலும் மைபிபிபி இல்லாத நிலையில் தாம் சுதந்திரமாக செயல்பட எந்தவொரு கட்சியின் பிடிக்குள்ளும் இல்லாமல் தனது முடிவை மைபிபிபி சுதந்திரமாக எடுக்க முடிகிறது என்று கேவியஸ் குறிப்பிட்டார்.

இன்று நடக்கும் மைபிபிபி உச்சமன்றக் கூட்டத்தில் தம்மை, கேமரன் மலை வேட்பாளராக நிறுத்த முடிவு எடுக்கப்படும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker