Latestமலேசியா

ரிம.2,000-உடன் இருந்த பணப் பையை உரியவரிடம் ஒப்படைந்த பிரேமாவதி!

ஈப்போ,ஜன.6- 2,000 ரிங்கிட் நோட்டுகளுடன் ஒரு பணப் பை கண்களில் பட்டால் நம்மில் எத்தனைப் பேருக்கு அதை உரியவரிடமே கொடுத்துவிட தோன்றும்? “வந்ததே… லக்கு வந்ததே…” என்று அந்தப் பணப் பையில் இருந்த பணத்தை எடுத்துக் கொள்பவர்கள்தான் நம்மில் பலர் இருக்கிறோம்.

ஆனால், தனது மளிகைக் கடையில் யாரோ தவறவிட்டு விட்ட 2,000 ரிங்கிட் பணத்துடன் இருந்த பணப் பையை அதன் உரிமையாளர் வரும் வரையில் பத்திரமாக வைத்திருந்திருக்கிறார் பி.பிரேமாவதி என்ற ஒரு பெண்மணி.

57 வயது பிரேமாவதி, புந்தோங்கில் கடந்த 34 ஆண்டுகளாக கடை வைத்திருக்கிறார்.

நேற்று முன்தினம், ஹர்பிரித் கோர் என்ற சீக்கியப் பெண்மணி வேலைக்குச் செல்லும் சமயத்தில் பிரேமாவதியின் கடைக்குப் பொருட்கள் வாங்க வந்திருகிறார்.

தன்னிடம் சில்லறை இல்லை என்றதும் தனது கணவரிடம் பணம் கேட்டிருக்கிறார். அவரது கணவர் தனது பணப் பையை அப்படியே ஹர்பிரித்திடம் தந்திருக்கிறார். ஹர்பிரித்தும் பணத்தைச் செலுத்தியதும் சென்று விட்டார்.

பணப் பையை கணவரிடம் திரும்ப தந்துவிட்டோம் என்ற ஞாபகத்திலேயே ஹர்பிரித் இருந்திருக்கிறார். இரவு கணவர் தனது பணப் பையைக் கேட்கவும் தான் பணப் பை தொலைந்து விட்டதை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர்.

ஹர்பிரித் உடனே புந்தோங்கில் உள்ள தனது நண்பருக்கு போன் செய்து தான் சாமான் வாங்கிய பிரேமாவதியின் கடைக்குச் சென்று பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

திரும்ப ஹர்பிரித்தை அழைத்த அவரது நண்பர், பணப் பையை பிரேமாவதி பத்திரமாக வைத்திருக்கும் நற்செய்தியைக் கூறி இருக்கிறார்.

`ஹர்பிரித் மறுநாள் கடைக்குச் சென்று தனது கணவரின் பணப் பையைப் பெற்றுக் கொண்டார். பிரேமாவதியின் கைகளை இறுக்கமாக பற்றி ஹர்பிரித் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker