Latestமலேசியா

அடுத்த மாமன்னர் யார்? மலாய் ஆட்சியாளர்கள் முடிவு செய்வர்!

கோலாலம்பூர்,ஜன.7- ஈராண்டுகளாக மாமன்னராக இருந்த சுல்தான் முகமட் V நேற்று பதவி விலகியதை அடுத்து, இடைக்கால மாமன்னராக சுல்தான் நஸ்ரின் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், புதிய மாமன்னராக யாரை மாமன்னராக நியமிப்பது தொடர்பில் முடிவெடுக்க மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் இன்று இஸ்தானா நெகாராவில் ஒன்று கூடியுள்ளது.

இந்த அவசரக் கூட்டத்தை அடுத்து அனைத்து மாநிலங்களின் மலாய் ஆட்சியாளர்களும் இன்று காலை முதலே இஸ்தானா நெகாராவுக்கு வந்த வண்ணமாக இருந்தனர்.

ஐந்தாண்டு காலத் தவணை முடிவுறும் முன்னரே சுல்தான் முகமட் V மாமன்னர் பதவியைத் துறந்துள்ளார். அவர் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி மாமன்னராக முடி சூட்டப்பட்டார்.

மலேசியாவில் சுழல் முறையில் மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால், அடுத்ததாக மாமன்னர் ஆகும் தகுதி உண்மையில் பகாங் சுல்தான், சுல்தான் அகமட் ஷாவுக்குத்தான் உண்டு. எனினும், அவரது உடல்நலம் சரி இல்லாததால் அவரது புதல்வராக தெங்கு அப்துல்லா இடைக்கால பகாங் சுல்தானாக இருந்து வருகிறார்.

ஒருவேளை சுல்தான் அகமட் ஷாவை மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் அடுத்த மாமன்னராக தேர்ந்தெடுக்காவிடில், அதற்கடுத்த இடத்தில் இருப்பது ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இஸ்காண்டர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker