Latestமலேசியா

கடலாமை மீது சவாரியா? விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்!

கோத்தா கினாபாலு,ஜன.7- சபாவில் எங்கோ ஓர் இடத்தில் கடலாமை மீது சிறுவர் ஒருவர் ஏறி அமர்ந்து செல்லும் படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகியதை அடுத்து, மக்கள் பலர் சம்பந்தப்பட்ட சுற்றுலா தளத்தின் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

சுற்றுலா தளம் ஒன்றில் உள்ள படகில் சிறுவர் ஒருவர் கடலாமை மீது உட்கார்ந்திருப்பது போல படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டது. பின்னர், அந்தப் படம் இதர சமூக ஊடகங்களிலும் அதிவேகமாக வைரல் ஆனது.

எனினும், அந்தப் படம் எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று இன்னும் தெரியவில்லை. ஆனால், அது சபாவில் எங்கோ ஓரிடத்தில்தான் நிகழ்ந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.

கடலாமை அழிவின் விளிம்பில் இருக்கும் ஓர் உயிரினமாகும். அதில் ஏறி உட்காருவது அதை வதைக்கும் விதமாக கருதப்படுகிறது.

ஆகையால், இந்தச் சம்பவம் தொடர்பில் சபா வனவிலக்குத் துறை விசாரணை நடத்தி வருவதாக அதன் இயக்குநர் ஆகஸ்தீன் தூகா தெரிவித்துள்ளார்.

எந்தச் சுற்றுல தளத்தில் இந்தச் சம்பவம் நடந்தது என்று தெரிந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker