Latestஉலகம்

கடும் பனிப்பொழிவு; ஜெர்மனியில் விமானப் பயணங்கள் ரத்து

பெர்லின், ஜன.7- ஜெர்மனியில் தொடர்ந்து கடும் பனிப்பொழிவு காரணமாக முனீச் விமான நிலையத்தில் விமானப் பயணங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. நீண்ட கால பயணத் தாமதங்களை எதிர்நோக்கி பயணிகள் தவிப்பில் இருக்கின்றனர்.

ஏறக்குறைய 120 விமானங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் தொடர்ந்து விமானங்கள் ரத்தாக வாய்ப்பு இருக்கிறது என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம் முனிச் விமான நிலையம் ஆகும். வானிலை மாறும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனால் பயணிகள் தங்கள் பயணம் குறித்த தகவல்களை முன் கூட்டியே உறுதி செய்த பின்னர் விமான நிலையத்திற்கு வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker