Latestமலேசியா

செலாயாங்கில் 9 நாய்கள் கொலை!

செலாயாங்,ஜன.7- சிரம்பானில் ஐந்து நாய்கள் விஷம் வைக்கப்பட்டு இறந்த கிடந்த சம்பவத்தை தொடர்ந்து செலாயாங், வாயூ 2 வீடமைப்பு பகுதிக்கு அருகில் நாய்கள் வெட்டப்பட்டும், எரியூட்டப்பட்டும் கிடக்க கண்டெடுக்கப்பட்டுள்ளன.

5 நாய்க்குட்டிகளும், அதன் தாயும் விஷம் வைக்கப்பட்டும், மேலும் மூன்று நாய்கள் கால்களும் இதர உடல்பகுதிகளில் வெட்டப்பட்டும் இறந்து கிடந்ததாகவும் வீதி நாய்களுக்கு உணவு அளித்து வரும் லோரி ஓட்டுநரான 56 வயது அமர் சிங்கும், அவரது 52 வயது மனைவி டால்ஜிட் கோரும் தெரிவித்தனர்.

“அந்த 9 நாய்களின் உடல்களையும் நாங்கள் அடக்கம் செய்துவிட்டோம். என்ன சொல்வதென்றே தெரியவில்லை” என்று டால்ஜிட் கவலையுடன் கூறினார்.

“அன்றாடம் மாலை 6 மணிக்கு வீதிகளில் உள்ள நாய்களுக்கு உணவு கொடுக்க இங்கு வருவோம். நேற்று அவற்றுக்கு உணவளிக்க சென்றபோது அவை இறந்து கிடந்தன. விஷம் சேர்க்கப்பட்டிருந்த சோற்றுத் தட்டு அங்கு இருந்தது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இறந்த போன நாய்கள் யாரையும் தொந்தரவே செய்ததில்லை என்றும், யாருமே அந்த நாய்கள் பற்றி இதுவரையில் ஏதும் சொன்னதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இப்படி இருக்க, ஏன் அந்தப் பிராணிகளுக்கு இத்தகைய கொடுமையை இழைத்தார்கள் என்று தெரியவில்லை என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker