Latestஇந்தியா

திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து! – தேர்தல் ஆணையம்

திருவாரூர் ஜன. 7- திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபைக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதல் அமைச்சரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி இரண்டாவது தடவையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தலைமை தேர்தல் ஆணையம் இது பற்றி ஆலோசித்து வந்தது.

தமிழ்நாட்டில் திருவாரூர் தொகுதி தவிர திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதால் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்ய அவகாசம் இருப்பதாலும் அந்த 10 தொகுதிகளின் தேர்தலை சற்று தாமதித்து நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை தலைமை ஆணையம் அறிவித்தது. அதன்படி வருகிற 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில் திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறு தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்தி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker