Latestஇந்தியா

நல்ல மாப்பிள்ளை பாருங்கள்! – தமன்னா

வேலூர், ஜன. 7-வேலூரில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை தமன்னா, தனக்கு  நல்ல மாப்பிள்ளை பாருங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலூரில் நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை தமன்னா பங்கேற்றார். அவரது வருகையை அறிந்த ரசிகர்கள் அண்ணா சாலையில் குவிந்தனர். ரசிகர்கள் முண்டியடித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தமன்னா நிருபர்களிடம் கூறியதாவது:- அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டில் ஆரம்பத்தில் நான் நடித்த “கண்ணே கலைமானே” படம் வெளியாகிறது. இதை அடுத்து தேவி 2, மகாலட்சுமி உள்பட பல படங்கள் வெளியாக உள்ளன.

நல்ல படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உண்டு. மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நிச்சயம் அப்படம் ஓடாது. சினமாவில் எனக்கு போட்டியாக யார் உள்ளார்கள் என்று கேட்டால் எல்லாத் துறைகளிலும் போட்டி உள்ளது. அது போல் சினிமாவிலும் போட்டி இருப்பது நல்லது தான்.

பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பேன். அதை ஓரளவுக்கு தர்மதுரை படம் நிவர்த்தி செய்துள்ளது. இனி வெளியாகும் படம் இன்னும் அதைவிட ஒருபடிக்கு மேல் கொண்டுபோகும்.

அரசியல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. “எப்போது எனது திருமணம் என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். எனக்கு நல்ல மாப்பிள்ளை பாருங்கள்” என்று தமன்னா குறிப்பிட்டார்.

தனது ரசிகர்களிடம் “வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். சீட் பெல்ட் கட்டாயம் போட வேண்டும். போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனம் ஓட்டினால் விபத்தை தவிர்க்கலாம் என்றார். பின்னர் அவர் தனது ரசிகர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார். 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker