Latestமலேசியா

பரபரப்பாக விற்பனையாகும் ‘சுட்ட’ டுரியான்கள்

கோத்தா கினாபாலு, ஜன.7- இங்குள்ள ஜாலான் காயா இரவு உணவுச் சந்தையில் விற்பனை செய்யப்படும் தீயில் சுட்ட டுரியான்கள், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பரபரப்பான விற்பனையை எட்டியுள்ளது..

டுரியான் பழங்களை விற்பனை செய்து வரும் டென்னிஸ் சான் என்பவர், இந்தப் புதிய வகை ‘சுட்ட டுரியானை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தார்.

ஜாலான் செப்பாங்கார் என்ற பகுதியில் விற்பனை செய்யப்படும் தீயில் சுட்ட இளநீருக்கு ஈடு கொடுக்கும் வகையில், இந்த சுட்ட டுரியான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.

அலுமினிய தகடில் சுற்றப்பட்டு, அந்த டுரியான்கள் கரியில் சுமார் 45 நிமிடங்களுக்கு வாட்டப் படுகின்றன என்று டென்னிஸ் சான் தெரிவித்தார்.

ரிம.60க்கு விற்பனையாகும் இந்த டுரியானை உடனடியாக சாப்பிட்டு விட முடியாது என்றும், அதன் சூடு ஓர் அளவிற்கு தணிந்த பின்னரே அதனை உட்கொள்ள முடியும் என்றும் அவர் சொன்னார்.

தீயில் வாட்டப்பட்ட டுரியானை விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய போதிலும், அதனை தாம் அண்மையில் தான் ஜாலான் காயா இரவு உணவுச் சந்தையில் அறிமுகப் படுத்தியதாக டென்னிஸ் சான் தெரிவித்தார்.

“சீனா, தென் கொரியா நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், மற்றும் டுரியான் விரும்பிகள் ஆகியோர் சுட்ட டுரியானை விரும்பி உண்கின்றனர்” என்று அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker