Latestமலேசியாவிளையாட்டு

பிரிட்டிஷ் ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி: நிக்கிலேஷ்வர் சாம்பியன் பட்டம் வென்றார்!

கோலாலம்பூர்,ஜன.7- இங்கிலாந்து, பர்மிங்கம் நகரில் நேற்று நடைபெற்ற பிரிட்டிஷ் ஜூனியர் ஸ்குவாஷ் பொது விருதுப் போட்டியில், 11 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கான பிரிவில், மலேசியாவின் நிக்கிலேஷ்வர் மோகனசுந்தரம் சாம்பியன் பட்டத்தை வாகை சூடினார்.

10 வயதான நிக்கிலேஷ்வர், எகிப்த்தின் கிறிஸ் படோருடன் மோதினார். முதல் செட்டில் 9-11 என்ற புள்ளிகளில் நிக்கிலேஷ் கிறிஸிடம் தோல்வியுற்றார். அதன் பிறகான செட்களில், நிக்கிலேஷ் வெகுண்டெழுந்தார். தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் 11-7, 11-4, 11-6 என்ற புள்ளிகளில் கிறிஸை வீழ்த்தினார்.

இந்நிலையில், “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வெற்றியை நான் பிறந்தநாள் பரிசாக என் அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று நிக்கிலஷ் கூறியுள்ளார்.

நிக்கிலேஷ், பினாங்கு, பெர்மாத்தாங் தீங்கி தமிழ்ப்பள்ளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிக்கிலேஷைத் தவிர்த்து, மலேசியாவை பிரதிநிதித்து விட்னி வில்சன், அய்ரா அஸ்மான், ஹரித் டேனியல் ஜெப்ரி, அமீஷன்ராஜ் சந்திரன் ஆகியோரும் இந்த ஸ்குவாஷ் இறுதிச் சுற்றில் பங்கேற்றிருந்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker