Latestமலேசியா

பேரரசர் பற்றிய பதிவு; தம்ரீன் கபார் பாபாவிடம் போலீஸ் விசாரணை!

ஜொகூர் பாரு, ஜன.7- முன்னாள் பேரரசர் சுல்தான் முகமட் குறித்து ஒரு வாரத்திற்கு முன்னர் தனது வலைதளக் கருத்துப் பதிவு பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டதன் தொடர்பில், முன்னாள் துணைப் பிரதமர் துன் அப்துல் கபார் பாபாவின் மகனான டத்தோ முகமட் தம்ரீனிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம், இரண்டு மாதங்களுக்கு மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வதற்காக சுல்தான் முகமட் எடுத்துக் கொண்ட விடுப்பு குறித்து தாம் தனது வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக போலிசார் ஜனவரி 3-ஆம் தேதியன்று தம்மை தொடர்புக் கொண்டு, கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்திற்கு தம்மை அழைத்ததாக முகமட் தம்ரீன் கூறினார்.

“இன்று நான் எனது வழக்கறிஞருடன், புக்கிட் அமான் வர்த்தக குற்றச்செயல் விசாரணை இலாகாவிற்கு செல்லவிருக்கின்றேன்” என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

தலைநகர் ஜாலான் துன் ரசாக்கில் உள்ள மெனாரா 238-வில் தன்னிடம் போலீஸ் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக அவர் இன்று அறிவித்துள்ளார்.

எந்தச் சட்டத்தின் கீழ் தம்மை விசாரிக்கப் போகிறார்கள் என்பது குறித்து போலிசார் தம்மிடம் தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர், இருந்த போதிலும், போலிசாருக்கு தேவையான அனைத்து விவரங்களையும் பகிர்ந்துக் கொள்ள தாம் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

தனது வலைத்தளத்தில் தாம் வெளியிட்ட கருத்துகள் வாயிலாக தாம் எவ்வித சட்டத்தையும் மீறவில்லை என்றும், மலேசிய அரச குடும்பங்களையும் தாம் எவ்விதத்திலும் அவமதிக்கவில்லை என்றும் அவர் நினைவுறுத்தினார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker