Latestமலேசியா

மகள் மீது சுடுநீரை ஊற்றிய ஆடவன் கைது!

ஜோர்ஜ் டவுன்,ஜன.7- மகள் தனக்கு வைத்திருந்த உணவை சாப்பிட்டு விட்டாள் என்பதற்காக அவள் மீது சுடுநீரை ஊற்றிய ஆடவன் நேற்று காலையில் போலீசாரிடம் அகப்பட்டான்.

அந்த 42 வயது ஆடவனும் அவனது 34 வயது மனைவியும் கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில், அவர்கள் நேற்று காலை 10 மணி அளவில் ஜாலான் பாயா தெருபோங்கில் உள்ள ஒரு டுரியான் கடைக்கு முன் போலீசாரிடம் பிடிபட்டனர்.

சென்ற வார வியாழக்கிழமை, ஆயர் ஈத்தாமிலுள்ள கம்போங் மெலாயூ அடுக்குமாடி குடியிருப்பில், சம்பந்தப்பட்ட ஆடவன்
வேலை முடிந்து பின்னிரவு 1 மணிக்கு வீடு திரும்பியிருக்கிறான். தனது 4 பிள்ளைகளும் மனைவி சமைத்த உணவைச் சாப்பிட்டு முடித்துவிட்டதை அறிந்து அவர்களை அடித்திருக்கிறான்.

அதுமட்டுமின்றி கோபத்தில் இரண்டாவது மகளின் மீது சுடுநீரை ஊற்றியிருக்கிறான்.

மகளின் மீது வெந்நீரை ஊற்றுவதை தடுக்காமல் வேடிக்கை பார்த்திருக்கிறாள் பெற்ற தாய். பிறகு, இவ்விவகாரம் போலீசார் காதுக்கு எட்டியது தெரிந்ததும் அவ்வாடவன் தனது மனைவி, நான்காவது பிள்ளையுடன் வீட்டிலிருந்து தப்பி தலைமறைவாகி விட்டனர்.

சுடுநீர் பட்டு எட்டே வயதான அச்சிறுமிக்கு கை, நெஞ்சுப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.

தொடக்கத்தில், அச்சிறுமி 10 ரிங்கிட் பணத்தை திருடி விட்டதால் அந்த ஆடவன் அவள மீது சுடுநீரை ஊற்றிவிட்டான் என்று செய்தி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker