Latestமலேசியா

5 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தந்தை-தாத்தா கைது!

கம்பார்,ஜன.7- கடந்த ஐந்தாண்டுகளாக சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அச்சிறுமியின் தந்தையையும் தாத்தாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது அச்சிறுமிக்கு 13 வயதாகிறது. நேற்று முன்தினம், அச்சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்ததை அடுத்து அவர்கள் இருவரும் கைதாகினர்.

சம்பந்தப்பட்ட சிறுமிக்கு 8 வயது இருக்கும்போதே அவரது தந்தையும், தாத்தாவும் அவளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கின்றனர். இப்படியே பல ஆண்டுகளாக அவர்கள் அச்சிறுமியை தங்களின் காம இச்சைக்கு இரையாக்கி வந்திருக்கின்றனர்.

அச்சிறுமி தனது தாயாரிடம் உண்மையை தெரிவிக்கவும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதையடுத்து, சிறுமியின் தாயார் போலீஸ் புகார் செய்தார்.

அச்சிறுமியின் பிறப்புறுப்பில் சதை கிழிந்திருந்த பழைய தழும்புகள் இருந்தது கம்பார் மருத்துவமனையில் செய்த பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. கூர்மையான பொருட்களை அவரது பிறப்புறுப்பில் நுழைத்திருப்பதால் அந்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker