Latestமலேசியா

5 வயது மகன் மரணம்; தந்தை- வளர்ப்புத் தாய் மீது குற்றச்சாட்டு!

ஜொகூர் பாரு,ஜன.07- 5 வயது சிறுவனை சித்ரவதைக்குள்ளாக்கி மரணத்தை விளைவித்ததன் பேரில் கைது செய்யப்பட்ட அந்தச் சிறுவனின் பெற்றோர் முகமட் வீரா முகமட் யாகூப் (வயது 33), நூர் அஃக்மா ரோஸ்லி (வயது 22) ஆகிய இருவர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அவ்விருவரிடமிருந்தும் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. மாறாக, அவ்விருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மாஜிஸ்திரேட் முன்னிலையில் மறுத்துள்ளனர்.

சமையல்காரராக பணிபுரிந்து வந்த முகமட் வீராவும், அவரது மனைவியும் கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி காலை 11.00 மணி முதல் இரவு 10.26 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், ஜாலான் சுத்ரா தாமான் செந்தோசா என்ற பகுதியில் இக்குற்றச்செயலில் ஈடுப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அவ்விருவர் மீது சுமத்தப்பட்ட குற்றஞ்சாட்டு நிரூபிக்கப்பட்டால், செக்க்ஷன் 302-இன் கீழ் கொலைக் குற்றத்திற்காக அவர்களுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று மாஜிஸ்திரேட் ரஷிடா பாஹ்ரோம் தெரிவித்தார்.

இச்சம்பவதில் மரணமடைந்த அச்சிறுவனின் சவப் பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரையில் இவ்வழக்கை தாம் பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker