Latestமலேசியா

60 வயதுக்கு மேலான தொழிலாளர்களின் குறைந்தபட்ச இபிஎப் 4% மட்டுமே!

கோலாலம்பூர், ஜன.7- தொழிலாளர் நல நிதியான இபிஎப்.புக்கு 60 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களின் குறைந்த பட்ச பங்களிப்பு மாதம் 4 விழுக்காடாக குறைக்கப் பட்டிருப்பது 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து அமலுக்கு வரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இபிஎப்.பில் பணம் செலுத்த விரும்பும் 60 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இது பொருந்தும் என்று இபிஎப்.பின் அறிக்கை தெரிவித்தது.

60 வயதை எட்டி விட்ட பிறகும் வேலை செய்யும் தொழிலாளர்கள், வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தொகையின் அளவை கூடுதலாக்குவதன் வழி அவர்களுக்கு உதவும் வகையிலான திட்டத்தை அரசாங்கம் அறிவித்திருந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோரின் இபிஎப் சந்தா தொகை 4 விழுக்காடாக குறைக்கப் பட்டிருக்கிறது.

மேலும் முதலாளிகள் தரப்பிலும் அவர்களின் பங்களிப்பாக தொழிலாளர்களுக்கு அளிக்கும் இபிஎப் சந்தா 4 விழுக்காடாக குறைக்கப்பட்டிருக்கிறது.

இதனால், 60 வயதுக்கும் மேற்பட்டஓருவருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முதலாளிகளுக்கு இது ஊக்குவிப்பை வழங்குவதாக அமையும்.

மேலும் 60 வயதுக்கு மேலான மக்கள், தொடர்ந்து உற்பத்தி திறனோடு இருப்பதையும் பொருளாதாரத்தில் தொடர்ந்து பங்களிப்புச் செய்து வருவதையும் உறுதி செய்வதாக அமையும் என்று இபிஎப் கூறியது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker