Latestசினிமா

தமிழ்ப் படத்தில் பாடகி ஜானகியின் தேன் குரல் மீண்டும் ஒலிக்கிறது!

சென்னை, ஜன. 8- மயக்கும் தேன் குரலால் தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர் எஸ் ஜானகி. சமீபகாலமாக படங்களில் பாடாமல் இருந்து வந்த ஜானகி நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் பாடியிருக்கிறார்.

கிராமப்புற மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு ‘பண்ணாடி’ என்ற பெயரில் புதுப்படம் ஒன்று தயாராகிறது.
குடும்பத்தில் வாழ்ந்த முன்னோடியாக மக்களின் வாழ்வியல் கதைதான் பண்ணாடி.

இப்படி வாழ்ந்து வந்த குடும்பத்திலிருந்து வந்த வாரிசு ஒருவர், இன்றைய கலாசார சூழலுக்கேற்ப எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு அதை எதிர்கொண்டு சமாளித்து வாழ்கிறார் என்பது தான் பண்ணாடி படத்தின் திரைக்கதை.

ராஜேஷ் ராமலிங்கம் இசையமைக்க கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார் பழனியப்பன். இத்திரைக்கதையினால் ஈர்க்கப்பட்டு இப்படத்தில் இரு பாடல்களை பாடியிருக்கிறார் எஸ். ஜானகி.

இரண்டு பாடல்களும் அற்புதமாக அமைந்துள்ளன. இன்றும் அவரது குரல் அப்படியே உள்ளது என இசையமைப்பாளர் ராஜேஷ் ராமலிங்கம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker