Latestஇந்தியாஉலகம்

பனை மர உச்சியில் மாரடைப்பு: தலைகீழாக தொங்கிய பரிதாபம்!!

கிருஷ்ணகிரி, ஜன. 8- பனைமர உச்சியில் தலைகீழாக தொங்கியபடியே கணேசன் என்ற தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். அவர் பனைமரம் ஏறும் தொழிலாளி ஆவார். இவருக்கு மனனவியும் இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை பதநீர் எடுக்க மரத்தில் ஏறினார். அப்போது திடீரென அவர் உச்சியிலிருந்து தலைகீழாக தொங்கியுள்ளார்.

பதநீர் எடுக்கப் போனவர் திடீரென தலைகீழாக தொங்குவதைக் கண்டு  அவரது நிலையை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தனர்.போலீசும் -தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர்.

ஆனால் மரத்தில் சறுக்கியப் படியே கீழே விழுந்து விட்டார்.கணேசனுக்கு முதலுதவி கொடுத்து  அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

ஆனால் கணேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். மேலும் மர உச்சியில் ஏறும் போது கணேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker