Latestமலேசியா

பேரரசர் பதவி துறப்பு; இஷ்டத்திற்கு காரணங்களை கூறாதீர்!

கோத்தா பாரு, ஜன.8- நாட்டின் பேரரசர் சுல்தான் முகமட் பதவி துறந்தது குறித்து இஷ்டத்திற்கு யாரும் காரணங்களை கூறவோ அல்லது தேடவோ வேண்டாம் என்று கிளாந்தான் மாநில அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

தனது பதவியை துறக்கும் அனைத்து உரிமையும் பேரரசருக்கு உண்டு. அதனை அனைவரும் மதிக்க வேண்டும் என்று கிளாந்தான் மாநில துணை மந்திரி பெசார் டத்தோ முகமட் அமார் நிக் அப்துல்லா கூறினார்.

“பேரரசரின் முடிவை கேள்வி கேட்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையில், ராஜா பெரெம்புவான் கிளந்தான் நியமனம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப் பட்டு வருகிறது. ராஜா பெரெம்புவான் கிளந்தான், கண்டிப்பாக மலாய் அல்லது முஸ்லீமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளதாக அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.

“கிளந்தான் மாநில சுல்தான், மலாய் அல்லது முஸ்லீமை தான் மணக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், பேரரசர் யாரை விரும்புகிறாரோ அவரை மணந்துக் கொள்ளலாம். அதற்கு எவ்வித தடையும் இல்லை” என்று முகமட் அமார் சொன்னார்.

சுல்தான் முகமட் அண்மையில் ரஷிய அழகி ஒருவரை திருமணம் செய்துக் கொண்டார் என்றும், அந்த ரஷிய அழகி இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறி விட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker