Latestஇந்தியா

முகநூல் நேரலையில் தற்கொலை முயற்சி: தக்க தருணத்தில் பெண் மீட்பு!

மும்பை, ஜன.8- விஷம் குடிப்பதை முகநூலில் நேரலையாக பதிவேற்றிய பெண் சமூக ஆர்வலரை, நண்பர்கள் துரிதமாக செயல்பட்டு போலீசார் உதவியுடன் மீட்டனர்.

லாத்தூர் பகுதியை சேர்ந்த விருசாலி காம்லே (வயது 30) என்ற பெண் “பதான்சேனா” என்ற அமைப்பில் இணைந்து சமூகச் சேவைகளில் ஈடுபட்டு வந்தார். இந்த அமைப்பில் அவருடன் பணியாற்றி வந்த சிலர், விருசாலிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதனால் விரக்தி அடைந்த அவர் சமீபத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகினார். ஆனாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்து அவர் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்தார். மேலும் அதை முகநூலில் நேரலையாக பதிவிடவும் எண்ணினார்.

அதன்படி, தனது முகநூல் மூலமாக நேரலையில் பேசினார். அதில் தான் வாழ்கையில் விரக்தி அடைந்ததால் விஷத்தை அருந்தித் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்தார். பின்னர் திடீரென நேரலையில் அதை குடிக்கவும் செய்தார்.

அப்போது அவரது முகநூல் நண்பர்கள் பலர் இதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதில் சிலர் துரிதமாக செயல்பட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்து விருசாலியை மீட்குமாறு வேண்டிக் கொண்டனர்.

அதன் பேரில் போலீசார் அவரது வீட்டைக் கண்டறிந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker