Latestமலேசியா

“இந்த தப்பு மீண்டும் நடக்காது!”- மன்னிப்பு கேட்டார் பாடகர் சந்தேஷ்!

கோலாலம்பூர், ஜன.9- தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலான ஆடையை அணிந்ததற்காக பிரபல உள்நாட்டு பாடகரான சந்தேஷ் நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கேட்டுள்ளார்.

டிவி 3 தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் அத்தகைய ஆடையை அணிந்து வந்தார். அதனால், மக்கள் பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதை அடுத்து, சந்தேஷ் தனது சமூக ஊடகங்களில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து 31 வயது சந்தேஷ் கூறியதாவது, “நம் நாட்டின் தேசியக் கொடியை அவமதிக்கும் அளவிற்கு நான் தீயவன் இல்லை, என் தாயகத்தை அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இத்தகைய எதார்த்தமான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என அவர் உறுதி அளித்துள்ளார்.

அவர் அணிந்திருந்த சட்டையின் முன்பகுதியில் தேசிய கொடியின் வடிவமைப்பு இருந்ததாகவும், அதில் இருந்த பிறைநிலாவுக்கும் நட்சத்திரத்திற்கும் பதிலாக வேலியைப் போன்ற வடிவமைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker