Latestமலேசியா

இரு குழந்தைகள் கழுத்தறுத்து கொலை; போதைப்பித்தன் கைது!

யான்,ஜன.8- கம்போங் சுங்கையில் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட ஆடவன் ஒருவன் திடீரென ஒரு வீட்டுக்குள் புகுந்து இரு குழந்தைகளை கழுத்தறுத்துக் கொன்றான்.

அக்கொடூரச் சம்பவம் நேற்றிரவு 11 மணி அளவில் நிகழ்ந்தது.

சம்பந்தப்பட்ட ஆடவன் முதலில் அங்கிருந்த ஓர் ஆடவரை தாக்கிய பின்னர் அவரது வீட்டுக்குள் புகுந்திருக்கிறான். வீட்டில் தங்களின் தாயுடன் இருந்த 4 வயது நூரூல் ஹனிம் என்ற பெண் குழந்தையையும், ஒரு வயது முகமட் ஹப்பிஸ் இட்ரிஸை என்ற ஆண் குழந்தையையும் அந்த ஆடவன் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்திருக்கிறான்.

சம்பவம் நிகழ்ந்து சிறிது நேரத்தில் அந்த ஆடவனை போலீசார் கைது செய்து விட்டதாக கெடா மாநில குற்றப்புலஆய்வுத் துறை தலைவர் மியோர் தெரிவித்தார்.

அந்த ஆடவனுக்கு ஏற்கெனவே போதைப்பொருள் தொடர்பில் குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் கண்டறிப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker