Latestஇந்தியாஉலகம்

“என் இதயத்தை திருடிவிட்டாள்!”- போலீசில் புகார் அளித்த இளைஞர்!

நாக்பூர்,ஜன.9- சூர்யாவின் சிங்கம் படத்தின் ‘SHE STOLE MY HEART’ பாடலை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இதயத்தை திருடி விட்டதாக வந்த போலீஸ் புகாரை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

நாக்பூரை சேர்ந்த ஓர் இளைஞர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த இளைஞரிடம் என்ன விஷயம் என்று போலீசார் விசாரிக்க, “என் இதயத்தை ஒரு பெண் திருடிவிட்டாள். அதை கண்டுபிடித்து எனக்கு திருப்பிக் தாருங்கள்” என்று சொல்லி இருக்கிறார்.

இதைக் கேட்டதும் போலீசார் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். அந்த இளைஞர் ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்றுதான் முதலில் போலீசார் நினைத்தனர். ஆனால் வந்ததிலிருந்தே விடாப்பிடியாக இதயத்தை கண்டுபிடித்து தாருங்கள் என்றே தொடர்ந்து சொல்லவும்தான், விஷயம் “சீரியஸ்” என போலீசாருக்கு புரிந்தது.

“நான் கேஸ் போடப் போகிறேன்” என்று அந்த இளைஞர் பிடிவாதம் பிடித்திருக்கிறார். அதனால் அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்த போலீசார், உடனே உயர் திகாரிகளை தொடர்பு கொண்டு, இப்படி ஒரு புகார் வந்திருக்கிறது, என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார்கள்.

இதைக் கேட்டு உயர் அதிகாரிகளும் அதிர்ச்சிதான் அடைந்திருக்கின்றனர். பிறகு, “இந்த புகாரை பதிவு செய்வதற்கு சட்டத்தில் எந்த உட்பிரிவும் இல்லை, அதனால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வும் இல்லை… அவரை திருப்பி அனுப்பி விடுங்கள் என்று அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதன்படியே அந்த இளைஞருக்கு போலீசார் புத்தி சொல்லி ஒருவழியாக வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker