Latestமலேசியா

கார் ஓட்டும் சோதனையில் தோல்வி; JPJ அதிகாரியை கத்தி முனையில் மிரட்டிய இளைஞன்!

மந்தின், ஜன.9- கார் ஓட்டும் சோதனையில் ஏற்கெனவே 3 முறை தோல்வியுறறது போதாது என்று, நான்காவது முறையும் தோல்வியுற்றதால் ஆத்திரமடைந்த இளைஞன், சாலைப் போக்குவரத்து துறை (JPJ) அதிகாரியை கத்தி முனையில் மிரட்டியுள்ளான்.

இச்சம்பவம் நேற்று காலை 10.23 மணி அளவில் மந்தின், பாத்தாங் பெனாரில் நிகழ்ந்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் நோர் மர்சூக்கி தெரிவித்தார்.

18 வயதான அந்த இளைஞன் கல்லூரியில் மாணவன் என்றும், அவன் கார் ஓட்டும் லைசன்ஸைப் பெறுவதற்காக ஏற்கெனவே 3 முறை கார் ஓட்டும் சோதனைக்குச் சென்று தோல்விதான் அடைந்திருக்கிறான் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, மறுசோதனைக்குச் சென்றிருந்த அந்த இளைஞன் சாலை சமிக்ஞை விளக்கின் விதியை மீறியதால், இம்முறையும் அவர் தோல்வி அடைந்தான். அதனால், அந்த இளைஞனிடம் காரை நிறுத்திவிட்டு இடம் மாறி அமரச் சொல்லி இருக்கிறார் அந்த JPJ அதிகாரி.

ஆனால், அந்த இளைஞனோ தனது தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் சம்பந்தப்பட்ட 34 வயது அதிகாரியை காய்கறி வெட்டும் கத்தியைக் காட்டி மிரட்டி இருக்கிறான்.

இச்சம்பவம் நிகழ்ந்து சிறிது நேரத்தில் சம்பவ இடத்தை அடைந்த போலீஸார் அந்த இளைஞனைக் கைது செய்துள்ளனர். சிறுநீர் பரிசோதனையில் அவன் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டறிப்பட்டது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker