Latestமலேசியா

‘சொஸ்மா’ சட்டத் திருத்தங்கள்; எப்படி அமையப் போகிறது? -ஹனிபா

பாலிங், ஜன.9- 2012 ஆம் ஆண்டின் சொஸ்மா தடுப்புச் சட்டம் தொடர்பான திருத்தங்கள் முழுமையாக ஆராயப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்திக் கொள்ளவிருக்கிறது என்று பிரதமர் துறை துணையமைச்சர் முகம்மட் ஹனிபா மைடின் தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டின் பாதுகாப்புக் குற்ற சிறப்பு நடவடிக்கைச் சட்டம் (சொஸ்மா) நாட்டுக்கும் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அதன் திருத்தங்கள் அமையும்.

அந்தச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப் படுபவர்களுக்கும் நியாயமான விசாரணை கிடைப்பதை அரசு உறுதி செய்யவிருக்கிறது. மேலும் நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் ஆபத்து ஏற்படாமல் இருப்பதும் உறுதிசெய்யப்படும் என்றார் அவர்.

சொஸ்மா சட்டத்தை நாங்கள் கொண்டுவரவில்லை. எங்களுக்கு முன்பு இருந்த பாரிசான் அரசாங்கம் கொண்டு வந்தது.

இப்போது நாங்கள் நாட்டின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளும் வேளையில் குற்றஞ்சாட்டப்படுபவருக்கும் நியாயமான விசாரணை அமைவதை உறுதிப்படுத்தி எல்லோரையும் பாதுகாக்க சிறந்த வழிமுறை கண்டறிந்து வருகிறோம் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker