Latestமலேசியா

நீர் ஊற்றில் நிர்வாணமாக குளித்தனரா? வைரலாகும் இளம்ஜோடியின் படம்!

கோத்தா கினாபாலு,ஜன.9- கோத்தா கினாபாலு நகரின் பிரபல காயா ஸ்ட்ரீட்டில் (Gaya Street) உள்ள நீர் ஊற்றில், நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்த இளம் ஜோடியின் படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.

அவர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் என்று நம்பப்படுகிறது.

சாலையின் நடுவே உள்ள ரவுண்டபோர்ட்டில் அந்த நீர் ஊற்று அமைந்துள்ளது. அதில், அவர்கள் இருவரும் ஆடை இல்லாமல் கட்டி அணைத்தப்படி உல்லாசமாக நீராடிக் கொண்டிருந்திருக்கின்றனர்.

எனினும், வைரல் ஆகிக் கொண்டிருக்கின்ற அவர்களின் படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், அச்சாலையில் உள்ள கடைகள் யாவும் மூடிய பிறகு பின்னிரவில் அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து கோத்தா கினாபாலு நகராண்மைக் கழகம் இன்னும் கருத்துரைக்கவில்லை என்று தெரிகிறது. ஏனெனில், அத்தகைய சம்பவம் நடந்துள்ளதாக தங்களுக்கு புகார் ஏதும் வரவில்லை என்று கோத்தா கினாபாலு நகராண்மைக் கழகத் தரப்பு கூறியுள்ளது. மேலும், வைரல் ஆகிக் கொண்டிருக்கும் படம் வேண்டுமென்றே வடிவமைக்கப்படமாகக் கூட இருக்கலாம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் கூட அந்த நீர் ஊற்றில் ஆட்கள் குளித்திருக்கின்றனர். ஆனால், நிர்வாணமாக குளித்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker