Latestமலேசியா

பகாங்கிற்கு புதிய சுல்தானா?

கோலாலம்பூர்,ஜன.9- அடுத்த மாமன்னர் யார் என்ற குழப்பம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில், இடைக்கால பகாங் சுல்தானாக இருக்கும் தெங்கு அப்துல்லா நிரந்தர சுல்தானாக முடி சூட்டப்படலாம் என்றும் அதன் பின் அவர் மாமன்னராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.

மலேசியாவில் சுழல் முறையில் மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்நிலையில், கிளந்தான் சுல்தான், சுல்தான் முகமட் V மாமன்னர் பதவியிலிருந்து விலகிக் கொண்ட வேளை, உண்மையில் அடுத்து மாமன்னர் ஆகும் வாய்ப்பு பகாங் சுல்தானுக்குத்தான். ஆனால், பகாங் சுல்தான் அகமட் ஷாவு உடல்நலம் சரி இல்லாமல் இருப்பதால் தற்போது அவருடைய புதல் தெங்கு அப்துல்லா இடைக்கால சுல்தானாக இருக்கிறார்.

இந்த வாய்ப்பை விட்டால், இதோடு பகாங் சுல்தானுக்கு மாமன்னராகவும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்றே தெரியாது. அதனால், தெங்கு அப்துல்லாவை பகாங் சுல்தான் ஆக்குவது தொடர்பில் பகாங்கில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை அம்மாநில அரச தரப்பு கூட்டம் நடத்தவிருப்பதாக தெரியவந்துள்ளது.

ஒருவேளை தெங்கு அப்துல்லா பகாங் சுல்தானாக முடி சூட்டப்பட்டால் அவரே அடுத்த மாமன்னர் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker