Latestமலேசியா

10 வயது சிறுமி மானபங்கம்; இரு ஆடவர்கள் கைது!

லபுவான்,ஜன.9- 10 வயது சிறுமியை மானபங்கம் செய்த இரு கார் கழுவும் பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளதாக லபுவான் போலீஸ் தலைவர் முகமட் பாரிட் அகமட் தெரிவித்தார்.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் அச்சிறுமியின் தாத்தா அளித்த புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட இரு ஆடவர்களும் இன்று காலை 10 மணிக்கு கைதாகினர்.

நேற்று மாலை 6 மணிக்கும் 7.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் சிறுமியை மானபங்கம் செய்ததாக கூறப்பட்டது. அவ்விவகாரம் குறித்து சிறுமி தனது தாத்தாவிடம் சொன்னதும், அவர் சிறுமியை அதிகாலை 2 மணி போல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

சிறுமியை பரிசோதித்ததில் அவர் மானபங்கம் படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker