Latestசினிமா

அஜித்தின் ‘விஸ்வாசம்’ பார்க்க பணம் தராத தந்தையை எரித்த மகன்!

சென்னை, ஜன.10- இன்று தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ மற்றும் நடிகர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராத தந்தையை எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாண்டியன் என்பவரிடம் அவரது மகன் அஜித்குமார் விஸ்வாசம் படம் பார்க்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு அவரது தந்தை மறுத்துள்ளார்.

இதனால் கோபம் கொண்ட அஜித்குமார், தனது தந்தை தூங்கித் கொண்டிருந்த போது பெட்ரோல் ஊற்றி எரித்ததில் படுகாயம் அடைந்த பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதன் காரணமாக அஜித்குமார் கைது செய்யப் பட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker