Latestஇந்தியாஉலகம்சினிமா

அஜித்தின் 20 அடி கட்-அவுட் சரிந்து ரசிகர்கள் காயம்!- (video)

விழுப்புரம், ஜன.10- பாலபிஷேம் செய்தபோது, அஜித்குமாரின் ராட்சத கட்-அவுட் சரிந்து விழுந்ததில் 6 ரசிகர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்த `விஸ்வாசம்’ திரைப்படம் இன்று வெளியானதையொட்டி, அவரது ரசிகர்கள் அனைத்து திரையரங்குகளின் முன்பும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

சற்றுமுன் கட்டவுட் சரிந்தது ஒருவர் பலியானார்…#விஸ்வாசம் 🤷‍♂️🤦‍♂️

Posted by Tamil Musical.ly on Wednesday, 9 January 2019

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீனிவாசா திரையரங்கில் `விஸ்வாசம் திரைப்படம்’ இன்று காலை திரையிடப்பட்டது.

அப்போது, 200-க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். திரையரங்கம் முன்பு 20 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த அஜித் கட்-அவுட் மீது 10-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஏறி மாலை அணிவித்து பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். அப்போது, பாரம் தாங்காமல் அந்த கட்-அவுட் கீழே சரிந்து விழுந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker