Latestமலேசியா

உலகிலேயே விலை உயர்ந்த உதட்டு அழகி!

மெல்பெர்ன். ஜன10- ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வைர நிறுவனம் ஒன்று தனது 50 ஆவது ஆண்டை முன்னிட்டு கின்னஸ் சாதனையைப் புரிந்துள்ளது. உலகிலேயே அதிக விலை மதிப்புமிக்க உதட்டழகை அது உருவாக்கையுள்ளது.

1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் வைர நகைகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில்,, தனது 50 ஆவது ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஒப்பனைக் கலைஞரான கிளார் பார்க், ஒரு மாடல் அழகியின் உதடுகளில் வைரங்களைப் பதித்து அசத்தியுள்ளார்.

ஒவ்வொன்றும் மதிப்புமிக்க வைரம் என்பதால் மிகத் தெளிவுடனும் கவனமுடனும் இந்தக் கலை வடிவத்தை செய்துள்ளார். 126 வைரக் கற்களைப் பயன்படுத்தி யுள்ளன. அதன் மொத்த எடை 22.92 காரட் ஆகும்.

மாடல் அழகி சார்லி ஆக்ரேவியாவின் உதடுகள் தான் வைரத்தில் வடிவமைக்கப் பட்டன. முதலில் உதட்டில் கருப்பு நிற  லிப்ஸ் டிக்கைப் தடவியுள்ளார். பின் பிசின் பயன்படுத்தி வைரங்களை உதடுகளில் ஓட்டியுள்ளார். இந்த இதழ்க் கலை, முழுமைப் பெற இரண்டரை மணி நேரமானது.

“மிகவும் பெருமையாக உணர்கிறேன். பல நாள் ஆராய்ச்சிகள், வடிவமைப்புகள், திட்டமிடல்கள் என நிகழ்ச்சி முடியும் வரை பரபரப்பாகவே இருந்தது. அவ்வாறு செயல் பட்டதனால்தான் விலை மதிப்பில்லாத இந்தச் சாதனையை எட்ட முடிந்தது. இதைத் தவிர வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும் என மனம் மகிழ்ந்து பேசியுள்ளார் மாடல் அழகி சார்லி ஆக்ரேவியா.

இது குறித்து அந்த வைர நிறுவனம் கூறிய போது பல வழிமுறைகளைப் பின்பற்றி இதைச் செய்ய வேண்டும். அதனால் கவனமுடன் கையாண்டதுதான் மிகவும் நெருக்கடியாக இருந்தது. இருப்பினும் உலகச் சாதனையைப் பெற்றதில் மகிழ்ச்சியே எனக் கூறியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker