Latestஉலகம்

உலக மகா கோடீஸ்வரர் காதலால் கவிழ்ந்தார்! மனைவியைப் பிரிந்தார்!

நியூயார்க், ஜன. 10- உலகின் முதல்நிலை பணக்காரரான அமேசோன் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெஸொஸ், தனது மனைவி மெக்கின்ஸியை விவாகரத்து செய்துள்ளார்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் மெக்கின்ஸி என்பவரை காதல் அமேசோன் தலைவர் ஜெப் பெஸொஸ், திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பெஸோசுக்கும் முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளினி லாரன் சான்ஸஸ் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, முறையற்ற உறவுகள் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பெஸோசுக்கும் மெக்கின்ஸிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஜெப் பெஸொஸின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 16,000 கோடி டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker