Latestசினிமா

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து: மன்னிப்புக் கேட்ட நடிகர் சக்தி!

சென்னை, ஜன.10- மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய செயலுக்காக நடிகர் சக்தி தனது பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான பி. வாசுவின் மகனுமான சக்தி நேற்றைய தினம் சென்னை சூளைமேட்டில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த அவரை தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டு பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் அது குறித்து கூறியதாவது: நேற்றைய செயலுக்காக உண்மையில் மிகவும் வருந்துகிறேன். இது போன்ற செயல் மீண்டும் நடக்காது என்பதை உறுதி கூறுகிறேன்.

இந்தச் சம்பவம் எனக்கு ஒரு பாடம். உண்மையாக வருந்துகிறேன் நண்பர்களே… என்னை மன்னித்து விடுங்கள்! அத்துடன் குடித்து விட்டு வண்டி ஓட்டாதீர்கள்

இவ்வாறு அதில் கூறியுள்ளார். முன்னதாக சக்தி குடிபோதையில் வேட்டி அவிழ்ந்து விழுவது கூட தெரியாமல் தள்ளாடிய வீடியோ வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker