Latestஉலகம்

சுட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பால்: ‘தேசத்தின் நாயகன்’ -டிரம்ப் புகழாரம்

வாஷிங்சன், ஜன.10- அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரி கர்ப்பால் சிங், “தேசத்தின் கதாநாயகன்” என அதிபர் டிரம்ப் புகழாராம் சூட்டினார்.

அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நியூமன் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த கர்ப்பால் சிங் (வயது 35), இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். கடந்த மாதம் 26 ஆம் போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த போது மெக்சிகோவைச் சேர்ந்த நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அந்த நபரை கலிபோர்னியா போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் கடந்த 4 ஆம் தேதி கர்பால் சிங்கின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றி சக போலீசாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய டிரம்ப், “சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரி கர்ப்பால் சிங் தேசத்தின் கதாநாயகன்” எனக் கூறி அவருக்கு புகழாரம் சூட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker