Latestமலேசியா

தேர்தல் ஆணையம் மீதான சிவராஜ் மேல்முறையீடு தள்ளுபடி!

கோலாலம்பூர்,ஜன.10- கேமரன் மலை இடைத்தேர்தலில் போட்டியிட தன்னை தேர்தல் ஆணையம் அனுமதிக்காததை எதிர்த்து அத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

தேர்தல் ஆணையத்தின் முடிவு அதிகாரப்பூர்வமானது என்பதனாலும், அம்முடிவு 1954-ஆம் ஆண்டின் தேர்தல் குற்றங்களுக்கான சட்டத்திற்கு புறம்பானதாக இல்லை என்பதனாலும் நீதிபதி நோர்டின் ஹசான் சிவராஜின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த வழக்கின் செலவுத் தொகையாக 5,000 ரிங்கிட் வழங்க வேண்டும் என்றும் அவர் சிவராஜுக்கு உத்தரவிட்டார்.

சிவராஜ் சார்பில் வழக்கறிஞர் ஏ.வசந்தி ஆஜராகிய வேளை, தேர்தல் ஆணையத்தை பிரதிநிதித்து வழக்கறிஞர்கள் சுஸானா அத்தான், அஸிஸான் முகமட் அர்ஷாட், எஸ்.நற்குணவதி ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

14-ஆவது பொதுத்தேர்தலில் சிவராஜின் வெற்றி செல்லாது என்று நவம்பர் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் கேமரன் மலை இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் தடுத்தது.

மேலும், அவர் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது என்றும் உத்தரவிட்டது. ஏனெனில், சிவராஜ் மீது லஞ்சத்தை உட்படுத்திய குற்றச்செயல் இருப்பதால் தேர்தல் ஆணையம் அவ்வாறு முடிவு எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker