Latestமலேசியா

‘நடு ரோட்டில் நின்றா புகைப் பிடிக்க முடியும்?’ -கேட்கிறார் நஜிப்

கோலாலம்பூர், ஜன.10- உணவகங்களில் புகைப் பிடிக்கத் தடை விதித்துள்ள சுகாதார அமைச்சின் செயலை தாம் ஆதரிப்பதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் கூறியுள்ளார்.

தமக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை என்றும், புகைப்பிடிப்பவர்கள் அப்பழக்கத்தை கைவிட்டு விட வெண்டும் என்றும் தாம் பலமுறை அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துக் கொண்டார்.

“நாட்டில் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இருந்த போதிலும், அப்பழக்கத்தை கைவிட முடியாதவர்களின் உரிமையையும் நாம் மதிக்க வேண்டும்” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டார்.

“புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிட முடியாத சிலரின் மீது இத்தடையை விதிப்பது கடுமையான செயலாக நான் கருதுகிறேன். உணவகம் மற்றும் சுற்றுலா துறைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இது சற்று கடினமான இருக்கும்.

“உணவகங்களிலிருந்து ஐந்தடியில் புகைப் பிடிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது. அப்படியென்றால், புகைப் பிடிப்பவர்கள் நடுரோட்டில் நின்று தான் புகைப் பிடிக்க முடியுமா? அவ்வாறு செய்யும் போது, அவர்களை பேருந்துகள் மோதினால் என்ன ஆவது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கமும் புகைப் பிடிக்கத் தடை விதித்தது என்றும், இருந்த போதிலும், சில இடங்களில் அந்தத் தடை விதிக்கப் படவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

புகைப் பிடிக்க தக்க சில இடங்கள் ஒதுக்கப் பட வேண்டும். ஆனால், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் அந்த இடங்களிலும் புகைப் பிடிக்க தடை விதித்து விட்டது என்று நஜிப் கூறினார்.

புகைப் பிடிக்கும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும் என்று அரசாங்கம் கருதினால், அதற்கு வேறு வழியை பின்பற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker