Latestஉலகம்

பல நாட்டு தூதரகங்களுக்கு ஒரே சமயத்தில் வந்த மர்மப் பார்சல்கள்! ஆஸி.யில் பீதி!

மெல்பர்ன், ஜன.10- ஆஸ்திரேலியாவில் இந்திய தூதரகம் உள்பட பல நாட்டுத் தூதரகங்களுக்கு ஒரே சமயத்தில் வந்த பல மர்மப் பார்சலால் திடீர் பீதி கிளம்பியது. மெல்பெர்ன் நகர் பதட்டநிலையை எட்டியது.

நேற்று அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு மர்ம பார்சல் ஒன்று வந்தது. அதே போல் பாகிஸ்தான், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, சுவட்சர்லாந்து, கிரீஸ் , இந்தோனேசியா, இங்கிலாந்து மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் தூதரகங்களுக்கும் மர்மப் பார்சல்கள் வந்தன.

இதன் காரணமாக மெல்பர்ன் நகரம் முழுவதும் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து அனைத்து தூதரகங்களிலும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசர சேவைகள் குழுவினர் குவிந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக தூதரகங்களில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் அந்த மர்மப் பார்சல்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவற்றில் ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையிலான பொருட்கள் ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் தான் மெல்பர்ன் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

அனைத்துலக நாடுகளின் தூதரகங்களுக்கு மர்ம பார்சல் வந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலியா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker