Latestமலேசியா

பிள்ளைகள் மீது சுடுநீர் ஊற்றிய குற்றத்தை ஒப்புக் கொண்ட தந்தை!

ஜோர்ஜ் டவுன்,ஜன.10- தனது பிள்ளைகளின் மீது சுடுநீரை ஊற்றிய குற்றச்சாட்டை ஆடவன் ஒருவன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டான்.

மாஜிஸ்திரேட் ரோஸ்னி முகமட் ரெடுவான் முன்னிலையில் தன் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, ஏடி நோரமின் ரம்லி என்ற அந்த 41 வயது ஆடவன் அதனை ஒப்புக் கொண்டான்.

டிசம்பர் 28-ஆம் தேதி, ஆயர் ஈத்தாமிலுள்ள கம்போங் மெலாயூ அடுக்குமாடி குடியிருப்பில், ஏடி வேலை முடிந்து பின்னிரவு 1 மணிக்கு வீடு திரும்பியிருக்கிறான். தனது 4 பிள்ளைகளும் மனைவி சமைத்த உணவைச் சாப்பிட்டு முடித்துவிட்டதை அறிந்து அவர்களை அடித்திருக்கிறான்.

அதுமட்டுமின்றி கோபத்தில் இரு பிள்ளைகள் மீது சுடுநீரை ஊற்றியிருக்கிறான்.

பிள்ளைகள் மீது கணவன் வெந்நீரை ஊற்றுவதை தடுக்காமல் வேடிக்கை பார்த்திருக்கிறாள் பெற்ற தாய்.

பிறகு, இவ்விவகாரம் போலீசார் காதுக்கு எட்டியது தெரிந்ததும் ஏடி தனது மனைவி, நான்காவது பிள்ளையுடன் வீட்டிலிருந்து தப்பி தலைமறைவாகி விட்டான். சுடுநீர் பட்டதால் 8 வயது மகளுக்கு கை, நெஞ்சுப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.அதே சமயம் 9 வயது மகனுக்கும் காயம் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏடிக்கு உண்மையில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது அவற்றில் இரண்டு தண்டனைகள் விதிக்கப்படலாம்.

எனினும், ஏடி குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து 15,000 ரிங்கிட் ஜாமின் தொகையின் பேரிலும், தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரிலும் அவனை விடுவிக்க மாஜிஸ்திரேட் ரோஸ்னி அனுமதி அளித்தார். எனினும், எக்காரணத்திற்காகவும் அவன் பாதிக்கப்பட்ட தனது பிள்ளைகளை நெருங்கக் கூடாது என்று அவர் உத்தரவிட்டார்.

மருத்துவமனை அறிக்கைக்காக காத்திருப்பதால் இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 12-ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படும். அன்று ஏடிக்கு என்ன தண்டனை என்று தெரிய வரும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker