Latestசினிமா

‘மெரினா புரட்சி’ – படம்: தணிக்கை துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, ஜன.10- ‘மெரினா புரட்சி’ திரைப்பட விவகாரத்தில் 7 நாட்களுக்குள் முடிவெடுக்க தணிக்கைத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017- ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக 8 நாட்கள் போராட்டம் நடத்தினர்.

இதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘மெரினா புரட்சி’ திரைப் படத்திற்கு 100 நாட்களாகியும் தணிக்கை சான்றிதழ் தரப்படவில்லை. காரணமே சொல்லாமல் 2 முறை நிராகரித்து உள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நாச்சியாள் பிலிம்ஸ் பட நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இந்தச் சூழ்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது

1) இத்தீர்ப்பு நகல் கிடைத்த 2 நாட்களுக்குள் படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் தன்னிடமுள்ள ஆதாரங்கள் விளக்கங்கள் நியாயங்களுடன் மறுபரிசீலனைக் குழு முன் ஆஜராக வேண்டும்.

2) அதிலிருந்து 7 நாட்களுக்குள் தணிக்கைத் துறை படத்திலுள்ள நல்ல நோக்கங்கள் மற்றும் அதன் தன்மை அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். -மேற்கண்டவாறு நீதிமன்றம் தீர்பளித்து இருக்கிறது. நீதிமன்றம் விடுத்த இந்த உத்தரவுக்காக இப்படத்தின் இயக்குனர் எம்.எஸ். ராஜ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker