Latestமலேசியா

வேதா விலகலா? செய்தியை மறுத்தது பெரித்தா ஹரியான்!

கோலாலம்பூர்,ஜன.10- “பெரித்தா ஹரியான்” (Berita Harian) இணைய பத்திரிக்கை வடிவத்தில் வெளியாகி இருந்த அமைச்சர் வேதமூர்த்தியை சம்பந்தப்படுத்திய செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என்று பெரித்தா ஹரியான் மறுத்துள்ளது.

“ஒருமைப்பாட்டு, சமூகநல அமைச்சர் வேதமூர்த்தி பதவி விலகினார்” என்று பெரித்தா ஹரியான் சின்னத்துடன் செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வந்தது.

இந்நிலையில், அந்தச் செய்திக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பெரித்தா ஹரியான் கூறியுள்ளது.
அதனால், வாசகர்கள் அச்செய்தியை பார்த்து குழப்பம் அடைய வேண்டாம் என்று அந்தப் பத்திரிக்கை தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இத்தகைய செய்தி, “பெண்டேக்கார் பெர்கூடா” என்ற பேஸ்புக் பக்கத்தில் முதல் முதலில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் தொடர்பில், போலீசில் புகார் அளிக்கவுள்ளதாக பெரித்தா ஹாரியான் தெரிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker