Latestஉலகம்

14 ஆண்டு கோமாவில் பெண் கர்ப்பம்;  என்ன நடந்தது? அதிர்ச்சி தரும்  உண்மை!

வாஷிங்டன், ஜன.10- அமெரிக்காவில் கடந்த 14 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்மணி கர்ப்பமான விவகாரத்தில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த மருத்துவமனை நிர்வாகத் தலைவர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் தென்மேற்கு மாநிலமான அரிசோனாவில் 14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்மணி, கர்ப்பமடைந்து பிள்ளை பெற்றெடுத்தார். இந்த விவகாரத்தில் முதற் கட்ட விசாரணையில் அந்தப் பெண்மணி பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஹசிண்டா என்ற மருத்துவமனையில் 29 வயதான அந்தப் பெண்,கடந்த 14 ஆண்டுகளாக ‘கோமா’வில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி பிள்ளை பெற்றெடுத்தார். மருத்துவமனையில் அந்தப் பெண்மணி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளது.

இதனிடையே மருத்துவமனையின் முதன்மை நிர்வாக அதிகாரி பில் டிம்மன்சுக்கு தெரியாமல் இந்த விவகாரம் நடந்திருக்க வாய்ப்பில்லை என முன்னாள் அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பத்தாண்டு காலம் அந்த மருத்துவமனையில் தாம் பணியாற்றியதாகவும் இதுபோன்று ‘கோமா’ நிலையில் இருந்த ஆண் நோயாளி ஒருவர் தொடர்பில் அவரது பாலுறுப்பு குறித்து, அங்குள்ள தாதிகள் ஆபாசமாக கிண்டல் செய்ததை தாம் காதால் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மட்டுமன்றி, அந்தப் பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருக்கிறார். ஆனால் இவ்விவகாரத்தை பில் டிம்மன்ஸ் மேலிடத்திற்கு தெரிவிக்காமல் மூடி மறைத்ததாக அந்நபர் தெரிவித்துள்ளார்.

பில் டிம்மன்ஸ் என்றாலே அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் பயந்து நடுங்குவதாகவும் அவருக்கு தெரியாமல் அந்த மருத்துவமனையில் ஏதும் நடக்காது எனவும் அந்த முன்னாள் ஊழியர் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker