Latestஉலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் போட்டியா?

வாஷிங்டன், ஜன.11- அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுப்பேன் என இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியாவில் போட்டியிட்டு செனட் சபை உறுப்பினரானார்.

மூத்த வழக்கறிஞரும் எழுத்தாளருமான கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினர் மற்றும் அமெரிக்க மக்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளது.எனவே, அடுத்த ஆண்டு 2020ஆம் ஆண்டில் நடைபெறும் அதிபர் தேர்தலில் இவர் டிரம்பை எதிர்த்து களம் இறங்குவார் என அமெரிக்க ஊடகங்களின் பரவலாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவெடுப்பேன் என தற்போது கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இதனை அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

யார் தலைமை பொறுப்புக்கு தகுதியானவர்?, யார் தங்களை நேர்மையான முறையில் வழிநடத்துவர்?, யார் தங்களின் பிரதிநிதியாக செயல்படுவர்? என்று அறிந்து அமெரிக்க மக்கள் தங்களுக்கான தலைவரை சரியாகத் தேர்வு செய்யும் திறனை கொண்டிருக்கிறார்கள் என அந்தப் பேட்டியில் அவர் சொன்னார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஒரு பெண்ணை அதிபர் ஆக்குவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது. அந்தப் பெண் நான் என்று கூறவில்லை என்றாலும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுப்பேன் என்று அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker