Latestமலேசியா

அரச நிந்தனை: புதிய சட்டங்கள் கவனமாக பரிசீலிக்கப்படுமா?

கோலாலம்பூர், ஜன.11- அரச நிந்தனையைத் தடுப்பதற்காக தொடர்பாக புதிய சட்டங்களைக் கொண்டு வரும் முன்னர் அது குறித்து மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரச அமைப்புகளுக்கு எதிரான நிந்தனை என்பது எத்தகைய அம்சங்கள் எனத் தெளிவாக அரசாங்கம் விளக்க அளிக்க மேற்கொள்ளும் முயற்சியை இணைப் பேராசிரியர் டாக்டர் ஷாம்ராயு அஸீஸ் வரவேற்றார்.

இப்பிரச்னையைக் களைவதற்காக இயற்றப்படும் புதிய சட்டத்தின் விளைவுகள் பற்றி முறையாக ஆராயப்படவேண்டும் என்றார் அவர்

இந்தச் சட்டத்தை நாடாளுமன்றம் அர்த்தப்படுவதாக இருந்தாலும் குற்றங்கள் தொடர்பான விளக்கங்களை உறுதிப்பட மேற்கொள்ளும் கடமையைப் புரிவதில் நீதிமன்றங்களின் கைகளைக் கட்டிப் போடுவதாகவும் கட்டுப்படுத்தி வைப்பதாகவும் அமையலாம் என்று அவர் தெரிவித்தார்.

பொறுப்பற்ற சிலரால் மன்னர் ஆட்சி அமைப்புக்கள் அவமதிக்கப்படாமல், அதன் மேன்மையை பாதுகாப்பதற்கு அரசாங்கம் புதிய சட்டங்களைக் கொண்டுவரும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ லியூ வுய் கியோங் என்று அண்மையில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்குப் பதிலாக ஏற்கெனவே நடப்பிலுள்ள குற்றவியல் சட்டம், நிந்தனைச் சட்டம், தொலைத் தொடர்பு, மற்றும் பல்லூடகச் சட்டம் ஆகியவற்றை அரசாங்கம் சீரமைக்கலாம் என்று பேராசிரியர் ஷாம்ராயு வலியுறுத்தினார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker