Latestஇந்தியாஉலகம்சினிமா

‘உசுப்பேத்தி, உசுப்பேத்தி’ என்னை நடிக்க வைத்தனர்!’- ரஜினி

சென்னை, ஜன.11- ‘பேட்ட’ படத்தில் என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள்” என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.

ரஜினி நடிப்பில் உருவான பேட்ட திரைப்படம் நேற்று உலமெங்கும் வெளியாகிவுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.  20 வருடங்களுக்கு முன் பார்த்த ரஜினியை திரையில் பார்த்ததாக பலரும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்காவில் ஓய்வை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், பேட்ட திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.

மிகவும் சந்தோஷம். ரசிகர்களின் சந்தோஷமே எனது சந்தோஷம். பேட்ட திரைப்படம் சிறப்பாக வந்ததற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜி தான் காரணம். என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்றார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker