Latestமலேசியா

“என் செல்லப் பூனைக் காணவில்லை!”- வேதனையுடன் நடிகை ரீத்தா போலீஸ் புகார்!

கோலாலம்பூர், ஜன.11- தன்னுடைய செல்ல பிராணியான வளர்ப்புப் பூனையைக் காணவில்லை என்று நடிகை ரீத்தா ருடாய்னி போலீசில் புகர் செய்துள்ளார்.

‘பெக்கான்’ என்ற செல்லப் பெயரைக் கொண்ட தன்னுடைய பூனையை எடுத்துச் சென்றவர்கள், அதனை விலைக்கு விற்றிருக்கக்கூடும் என்று அவர் போலீஸ் புகாரில் சுட்டிக்காட்டி உள்ளார்.

செமிஞ்சேயிலுள்ள போலீஸ் நிலயத்தில் அவர் இந்தப் புகாரைச் செய்தார். கடந்த ஜனவரி 1ஆம் தேதி, பண்டார் பாரு செமிஞ்சேயிலுள்ள தெரிந்த தம்பதியர் ஒருவரிடம் பெக்கானைத் தான் ஒப்படைத்தாகவும் இந்த ஆண் பூனை இனவிருத்தி நோக்கத்தில் அவர்களிடம் ‘கடனாக’ ஒப்படைக்கப் பட்டதாகவும் 42 வயதுடைய ரீத்தா கூறினார்.

ஆனால் அவர்களின் கூண்டிலிருந்து பெக்கான் தப்பிச் சென்று விட்டது என்று அந்தத் தம்பதியர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் சொன்னார். இருப்பினும், அவர்களின் கூற்றில் தனக்கு நம்பிக்கை என்று கூறிய அவர், காரணம் அவர்கள் காணாமல் போன பெக்கானைத் தேடிக் கண்டுபிடிப்பத்தில் கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை என்று வேதனைப்பட்டார்.

இந்த விவகாரத்தில் நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டிருப்பது நிருபிக்கப்பட்டால், தாம் சும்மா விடப் போவதில்லை என்றார் அவர்.

பூனைகளைப் பிடித்து விற்பனை செய்யும் கும்பல் இருக்குமானால், நான் சும்மா விடமாட்டேன். என்னுடைய பூனைக்கு மட்டுமல்ல, அப்படி காணாமல் போன இதர பூனைகளுக்கும் நீதி கிடைக்கப் போராடுவேன் என்று தம்முடைய இன்ஸ்டாக்கிராம் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரீத்தாவின் வளர்ப்பு பூனையான ‘பிரிட்டீஷ் ஷார்ட்ஹேர்’ இனப் பூனைகள் 2,000 ரிங்கிட் முதல் 4,000 ரிங்கிட் வரை விலை மதிப்பைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker