Latestமலேசியா

எல்லா சமயங்களின் உணர்வுகளையும் அரசு மதிக்கும்! -மகாதீர்

கோலாலம்பூர், ஜன. 11- நாட்டிலுள்ள அனைத்து சமயங்களின் உணர்வுகளுக்கும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மதிப்பளிக்கும் என்று பிரதமர் துன் டாகடர் மகாதீர் கூறினார்.

புத்தம், கிறிஸ்துவம் இந்து, சீக்கியம் மற்றும் தாவ்ஸிசம் ஆகிய சர்வசமய ஆலோசனை மன்றத்தின் உறுப்பினர்களைதமது அலுவலகத்தில் சந்தித்துப் பேசிய போது பிரதமர் மகாதீர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கோலாலம்பூரிலுள்ள எனது அலுவலகத்தில் சர்வ சமய மன்றத்தின் ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக என்னைச் சந்தித்தனர் என்று தம்முடைய முகநூல் பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.

நமது வேறுபாடுகளுக்கு இடையே, சமய நல்லெண்ணம் மற்றும் சமய சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்தவரையில் இதர நாடுகளைக் காட்டிலும் இந்த நாடு மிகுந்த அமைதியுடன் திகழ்கிறது.

இந்த அரசாங்கம் இதர சமயங்களின் உணர்வுகளை மதிக்கும் அதேவேளையில் நாம் ஒவ்வொருவரும் சட்டவிதிமுறைகளை மதித்து நடக்கவேண்டும் என்று அவர் சொன்னார். மேலும் சர்வ சமய மன்றத்தினருடன் கலந்துரையாடியது தொடர்பாக 4 புகைப் படங்களையும் அவர் முகநூலில் வெளியிட்டுள்ளார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker