Latestமலேசியா

கெரிக்: பாலத்தின் கீழ் மனித எலும்புக் கூடு மீட்பு!

லெங்கோங்,ஜன.11- கெரிக் அருகேயுள்ள லெங்கோங்கில் அமைந்துள்ள ராஜா மூடா நஸ்ரின் பாலத்தின் கீழ் மனித எலும்புக் கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 3 மணி அளவில் கண்டெடுக்கப்பட்ட அந்த எலும்புக் கூடு ஆண் உடையது என நம்பப்படுவதாக கெரிக் மாவட்ட போலீஸ் தலைவர் இஸ்மாயில் சே இசா தெரிவித்தார்.

“சம்பவ இடத்தில் போலீசார் மேற்கொண்ட சோதனையின்படி அந்த நபர் ஒரு மாதத்திற்கு முன்பாக உயிரிழந்திருக்கலாம்.

“எனினும், அந்த நபர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அதனால், காணாமல் போனவர்கள் குறித்து அளிக்கப்பட்ட போலீஸ் புகாரை போலீஸார் அலசி ஆராயவுள்ளது” என்ற் இஸ்மாயில் கூறினார்.

மாற்றுத்திறனாளி ஒருவர் காணாமல் போயிருப்பதாக அண்மையில் போலீஸ் புகார் வந்ததாகவும், இந்தச் சம்பவம் தொடர்பில் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மரபணு சோதனை மூலமாக கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடு அந்த மாற்றுத்திறனாளி நபர் உடையதா என்பதை இல்லையா என்பதை உறுதிப்படுத்தவிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker