Latestமலேசியா

சித்ரவதைக்கு ஆளான 9 மாத குழந்தை கவலைக்கிடம்!

சீபு,ஜன.11- மூன்று நாட்களுக்கு முன்பு பராமரிப்பாளரால் சித்ரவதைக்கு ஆளான 9 மாத குழந்தை மருத்துவமனையில் மிகக் கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடி வருகிறது.

எனினும், அக்குழந்தையின் சகோதரான மற்றொரு 17 மாதக் குழந்தையின் உடல் நலம் சற்று தேறி வருவதாக சீபு மாவட்ட போலீஸ் தலைவர் ஸ்டேன்லி ஜோனத்தன் தெரிவித்தார். இந்தக் குழந்தைக்கு மேல் பற்கள் உடைக்கப்பட்டிருந்ததாகவும் உதட்டில் காயம் பட்டிருந்ததாகவும் தெரிகிறது.

சம்பந்தப்பட்ட குழந்தை உயிருக்கு போராடி வருவதால் அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிருமிகள் ஏதும் தொற்றாமல் இருக்க அக்குழந்தையை யாரும் வந்து பார்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் தடை விதித்திருக்கிறார்கள்.

ஜனவர் 7-ஆம் தேதி, இவ்விரு குழந்தைகளும் சுயநினைவின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன. 17 மாதக் குழந்தையின் பற்கள் உடைக்கப்பட்டிருந்த வேளை உதடுகள் காயமுற்றிருந்தன.

அதே சமயம், 9 மாதக் குழந்தையின் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். கண்களிலும் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது. மேலும், குழந்தையின் தலையில் உள்ள எலும்பு முறிந்திருந்தது.

இந்தக் குழந்தைகளின் பெற்றோர் ஆசிரியர்களாகப் பணியாற்றி வருவதாக் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குழந்தைகளை பராமரிப்பாளர் ஒருவரிடம் விட்டு வந்தனர். தற்போது இந்த குழந்தைகள் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் அந்தப் பராமரிப்பாளர் போலீஸ் காவலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker