Latestமலேசியா

நம்ம ஊர் சிறுவனைக் கவர்ந்த எருமைகள் உலகம்!

கோலத்திரங்கானு,ஜன.11- புகைப்படங்கள் பேசும் வார்த்தைகள் வல்லமையுள்ள உணர்ச்சியுள்ள பேச்சை விட கூர்மையானவை. அத்தகைய படங்களைத்தான் தனது கேமராவுக்குள் பதிவு செய்த முகமட் நஸ்ரி சுலைமான் என்ற புகைப்படக் கலைஞர். பையன் ஒருவன் தனது மாடுகள், எருமைகளுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளைக் கொண்ட அவரது படங்கள் இத்தாலியில் நடைபெற்ற சீயேனா அனைத்துலக புகைப்பட விருதளிப்பு விழாவில் விருதினைப் பெற்றுள்ளன.

2018-ஆம் ஆண்டுக்கான ஆசியானின் சிறந்த ஜியோகிராபிக் புகைப்படங்கள் என்று அந்தப் படங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கோலத்திரங்கானு, பாடாங் பிடின் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த முகமட் சூக்கோர் என்ற 14 வயது மாணவன் தான் இந்தப் படங்களின் மாடல். அம்மாணவன் தனது எருமைகளுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளைத்தான் நஸ்ரி அழகழகாய்ப் பிடித்திருந்தார்.

அந்தப் படங்களுக்கான சூக்கோர் செயற்கையாக எல்லாம் போஸ் கொடுக்கவில்லையாம். அவன் எப்போதும் தனது எருமைகளுடன் இருக்கும் காட்சிகளையே நஸ்ரி தனது கேமராவில் “கிளிக்” செய்தாராம். அந்தப் படங்கள் சூக்கோரை உலக அரங்கில் பிரபலப்படுத்தும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

இந்நிலையில், “எனது எருமையுடன் நான் கொஞ்சி விளையாடிய காட்சிகள் உலக அளவில் பிரபலம் ஆகும் என்று நான் நினைத்து பார்த்தது கூட இல்லை” என்று சூக்கோரும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker